ஸ்ரீநிவாச பெருமாள் பிரதிஷ்டை தின விழாவில் திருக்கல்யாணம்
ADDED :443 days ago
திருநகர்; மதுரை திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி பூமாதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் பிரதிஷ்டை தின விழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. யாக பூஜை முடிந்து உற்சவர்களுக்கு அபிஷேகமாகி திருக்கல்யாண அலங்காரமானது. மாலை மாற்றும் நிகழ்ச்சி முடிந்து திருக்கல்யாணம், தீபாராதனை நடந்தது.