உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கோவிந்த பட்டாபிஷேகம்

நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கோவிந்த பட்டாபிஷேகம்

பெரியகுளம்; பெரியகுளம் தென்கரை நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் முரளீதரசுவாமி தலைமையில் கோவிந்த பட்டாபிஷேகம் நடந்தது.

கிருஷ்ணர், ராதைக்கு, பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர், மஞ்சள் உட்பட மங்கள பொருட்களால் திருமஞ்சனம் செய்தார். தொடர்ந்து சுவாமிக்கு மல்லி, முல்லை, தாமரை, அரளி, துளசி உட்பட பல வண்ண மலர்களால் கோவிந்த நாமம் சொல்லி, பட்டாபிஷேகம் நடத்தினார்‌. திருமணம் பிரார்த்தனை,‌ குழந்தை பாக்கியம் வேண்டி கூட்டு பிரார்த்தனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஸ்ரீகிருஷ்ண பிரசாதம், அன்னதானம் பங்கேற்ற பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கிருஷ்ணசைதன்யதாஸ், பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !