மகா பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா
ADDED :629 days ago
அன்னூர், மொண்டிபாளையம் பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது.
மொண்டிபாளையம் அருகே திம்ம நாயக்கன்புதூரில், பிரசித்தி பெற்ற மகா பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடக்கிறது. இந்த மாத விழா நேற்று இரவு நடந்தது. கோவிலில் யாகசாலை பூஜை நடந்தது. பைரவருக்கு, பால், தயிர், நெய் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.