டி-20 உலக கோப்பை; இந்திய அணியின் வெற்றிக்காக ரசிகர்கள் வழிபாடு
ADDED :549 days ago
பிரயாக்ராஜ்; வெஸ்ட் இண்டீசில் 9வது டி-20 உலக கோப்பை தொடர் நடக்கிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட முன்னணி அணிகள் வெளியேறின. இன்று பார்படாசின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் பைனலில் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. உத்தரபிரதேசம், பிரயாக்ராஜ் கோயில்களில் இந்திய அணியின் வெற்றிக்காக கிரிக்கெட் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.