பஞ்சமுக வாராஹி, உன்மத்த பைரவர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :532 days ago
மேலுார்; அ.செட்டியார்பட்டியில் பஞ்சமுக வாராஹி, உன்மத்த பைரவர் மற்றும் ராமதேவ சித்தர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூலை 8 யாகசாலை பூஜை துவங்கியது. நான்காம் கால யாகசலை பூஜை முடிவில் சிவாச்சாரியார் கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். அதனை தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது. பிறகு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அ.வல்லாளபட்டி, புலிப்பட்டி, அழகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.