உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஷாட நவராத்திரி; சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்த வராஹி

ஆஷாட நவராத்திரி; சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்த வராஹி

பரமக்குடி; பரமக்குடி நகராட்சி அருகில் உள்ள சப்தேழு கன்னிமார் கோயிலில், சொர்ண வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா நடக்கிறது. தொடர்ந்து 9 நாட்கள் நடக்கும் விழாவில், ஜூலை 14 அன்று காலை 9:00 மணிக்கு உலக மக்கள் நன்மைக்காக மகா யாகம் நடக்கிறது. ஜூலை 15 மாலை 5:30 மணிக்கு வராஹி அம்மன் அலங்காரத்தில் வீதி உலா வருகிறார். விழாவையொட்டி, மஞ்சள் முகத்துடன் சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் வராஹி அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !