/
கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
ADDED :408 days ago
கமுதி; கமுதி அருகே கோரப்பள்ளம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா, பொங்கல் விழா நடந்தது.ஆடி முதல் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் முத்துமாரியம்மனுக்கு சிறப்புபூஜை, தீபாரதனை நடந்தது. விழாவை முன்னிட்டு கருப்புசாமி வேடமணிந்து திரியாட்டம் ஆடி அருள்வாக்கு கூறினார். காப்புகட்டிய பக்தர்கள் கிராமத்தின் காவல் தெய்வமான கருப்புசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களை வணங்கி ஊர்வலமாக வந்து கோயில் முன்பு பூக்குழி இறங்கினர்.கிராமமக்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.மாலை முளைப்பாரி தூக்கி ஊர்வலமாக சென்று கங்கையில் கரைத்தனர். கமுதி சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.