ஆடி இரண்டாம் வெள்ளி; அவிநாசி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED :478 days ago
அவிநாசி; ஆடி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அவிநாசி பகுதி அம்மன்கள் அருள் பாலித்தனர். அவிநாசி சேவூர் ரோட்டில் மடத்து பாளையம் பிரிவில் உள்ள பன்னாரி மாரியம்மன்,சீனிவாசபுரம் பகுதியில் உள்ள எல்லை பத்து கை காளியம்மன், எல்லை மாகாளியம்மன், செம்பியநல்லூரில் உள்ள ஸ்ரீ செம்பியம்மன் ஆகிய கோவில்களில் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.