நாங்குனோி வானமாமலைப் பெருமாள் கோவிலில் ஆடிப்பூரஉற்சவம்
ADDED :508 days ago
திருநெல்வேலி; வானமாமலை பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் இது 48வது திவ்ய தேசம். இக்கோவில் நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் அமைந்துள்ளது. சிறப்பு மிக்க இக்கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இன்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு சுவாமி தெய்வநாயகன் ஸ்ரீவரமங்கை ஸ்ரீஆண்டாள் ஆகியோருக்கு நவகலச திருமஞ்சனமும் சிறப்பு அலங்காரமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.