தாளக்கரை லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா
அவிநாசி; சேவூர் அடுத்த தாளக்கரையில் எழுந்தருளியுள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
அவிநாசி வட்டம், சேவூர் அடுத்த மங்கரசு வலையபாளையம் அருகே தாளக்கரையில் எழுந்தருளியுள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் திருத்தலம்,பழமை வாய்ந்ததாகும். இக்கோவிலில் கடந்த வருடம் செப்டம்பர் 3ம் தேதி மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழாவில் கடந்த 22ம் தேதி பஞ்சசுக்த பாராயணம், கலச ஆவாஹனம், மூலமந்திர ஹோமம், திரவியாகுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன் பின்னர் நேற்று திருப்பள்ளியெழுச்சி, திருப்பல்லாண்டு, வேதிகார்ச்சனை, சகஸ்ரநாம பாராயணம் ஆகியவையுடன் கலச புறப்பாடு நடைபெற்றது. நேற்று காலை லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மஹா தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.