உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமை பதியில் ஆவணி திருவிழா துவக்கம்

சுவாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமை பதியில் ஆவணி திருவிழா துவக்கம்

நாகர்கோவில்; சுவாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமை பதியில் ஆவணி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அய்யா வைகுண்டரின் தலைமை பதி அமைந்துள்ள சுவாமி தோப்பில் ஆவணி திருவிழா நேற்று காலை 6:30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 4:00 மணிக்கு முந்திரிப்பதமிட்டு பள்ளியறை திறத்தல், 5:00 மணிக்கு ஐயாவுக்கு பணிவிடை தொடர்ந்து கொடி பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சிநடைபெற்றது. காலை 6:30 க்கு கொடியேற்றம் நடைபெற்றது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. 11-ம் நாள் செப்.,இரண்டாம் தேதி பகல் 12:00 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று நள்ளிரவு 12:00 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவுபெறும். விழா நடைபெறும் எல்லா நாட்களிலும் அய்யா பல்வேறு வாகனங்களில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !