உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மத்யாஷ்டமி; வெண்ணை காப்பு கிருஷ்ணர் அலங்காரத்தில் பூதநாராயண பெருமாள் அருள்பாலிப்பு

மத்யாஷ்டமி; வெண்ணை காப்பு கிருஷ்ணர் அலங்காரத்தில் பூதநாராயண பெருமாள் அருள்பாலிப்பு

திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில்,  புரட்டாசி மத்யாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், அரிசி, பஞ்சாமிர்தம் என பல்வேறு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. விழாவில்  வெண்ணை காப்பில் கிருஷ்ணர் அலங்காரத்தில்,  பூதநாராயண பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !