பழநி கோயிலில் ரஷ்யா பக்தர்கள் வேல் காணிக்கை செலுத்தி தரிசனம்
ADDED :399 days ago
பழநி; பழநி கோயிலில் ரஷ்யாவைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து பித்தளை வேல் காணிக்கையாக செலுத்தினர். பழநி கோயிலுக்கு ரஷ்யாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட ஐந்து நபர்கள் வருகை புரிந்தனர். படிப்பாதை மூலம் மலைக்கோயில் சென்றனர். அவர்கள் ஐந்து அடி பித்தளை வேல் கொண்டு வந்திருந்தனர். அதனை கோயிலில் காணிக்கையாக செலுத்தினர். இவர்கள் கடந்த வாரம் தமிழகம் வந்தனர். பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் தரிசனம் செய்த பின் பழநி கோயிலில் தரிசனம் செய்ய வருகை புரிந்துள்ளனர். மேலும் சுவாமி தரிசனம் முடிந்த பிறகு வின்ச் மூலம் கீழே இறங்கி கரூருக்கு சென்றுள்ளனர்.