உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசியில் இருந்து ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவிலுக்கு ஏலக்காய், கிராம்பு மாலைகள்

அவிநாசியில் இருந்து ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவிலுக்கு ஏலக்காய், கிராம்பு மாலைகள்

அவிநாசி; அவிநாசியில் இருந்து இடுகம்பாளையம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு பக்தரின் நேர்த்திக்கடன் செலுத்த ஏலக்காய் மற்றும் கிராம்பு மாலைகள் கொண்டு செல்லப்பட்டது.


கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகே இடுகம்பாளையம் பகுதியில் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பக்தர் ஒருவர் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக,ஏலக்காய் மற்றும் கிராம்பு ஆகியவற்றால் எட்டடி உயர மாலைகள் அவிநாசி மேற்கு ரத வீதியில் உள்ள பாபு மலர் நிலையத்தில் உருவாக்கப்பட்டது. இதுகுறித்து பாபு மலர்நிலைய உரிமையாளர் கூறும்போது, ஆறு கிலோ ஏலக்காய் மற்றும் 7 கிலோ கிராம்பு ஆகியவற்றால், கடந்த ஒரு வார காலமாக இந்த இரு மாலைகளும் தயார் செய்யப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !