உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வெள்ளலுார் பைரவர்

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வெள்ளலுார் பைரவர்

கோவை; வெள்ளலுார், ஆறுபடை நகர், ஆதிசக்தி, அதி பரமேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள பைரவர் சன்னதியில், அஷ்டமிதோறும் மாலையில் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகின்றன. ஆண்டுதோறும் காலபைரவரின் அவதார தினமான கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியில், சிறப்பு யாகங்கள், அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெறும். நடப்பாண்டும் தேய்பிறை அஷ்டமியில், காலை முதலே சிறப்புமிகு யாகங்களுடன், பூஜைகள் துவங்கியது. மாலையில் பல்வேறு பொருட்களைக் கொண்டு சிறப்புமிக்க அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் பல்வேறு வகையான வண்ண மலர்களால் காலபைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !