சோளிங்கர் சோழபுரீஸ்வரர் கோவிலில் விளக்கு பூஜை
ADDED :274 days ago
ராணிப்பேட்டை; ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஜார் தெருவில் அமைந்துள்ள சோழபுரீஸ்வரர் கோவிலில் ஐயப்ப சாமி பக்தர்கள் சபா சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஐயப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து உலக மக்கள் அனைத்து நலங்களை பெற்று, நோய் நொடி இன்றி வாழவும், மாங்கல்யம் பலம்பெற வேண்டியும், உலக நன்மை வேண்டியும் 300 பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து புஷ்ப அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.