/
கோயில்கள் செய்திகள் / காஞ்சி மடத்தில் திருப்பதி தேவஸ்தான தலைவர்; விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசி
காஞ்சி மடத்தில் திருப்பதி தேவஸ்தான தலைவர்; விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசி
ADDED :398 days ago
திருப்பதி; திருமலையில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமியை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை திருமலையில் உள்ள காஞ்சி மடத்தில் சந்தித்து ஆசி பெற்றார். இந்த நிகழ்வில் தேவஸ்தான தலைவரிடம் பேசிய சுவாமிஜி; புதிய அறங்காவலர் குழு சமீபத்தில் எடுத்த முடிவுகளைப் பாராட்டினார். திருமலையின் புனிதத்தைப் பாதுகாக்கவும், பக்தர்கள் பயன்பெறவும் முடிவுகளை எடுப்பது பாராட்டுக்குரியது என்றார். திருமலையை மேலும் அழகான தெய்வீகத் தலமாக மாற்றவும், வேத அறிவைப் பரப்புவதற்கு பாடுபடவும் அவர் அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.