மேலும் செய்திகள்
களத்துப்பட்டியில் மாடு மாலை தாண்டும் வினோத திருவிழா
237 days ago
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
237 days ago
மேலச்சேரி ஆதி திரவுபதியம்மன் கோவிலில் ஜெயந்தி விழா
237 days ago
பாலக்காடு; பாலக்காடு மேற்கு யாக்கரை ஸ்ரீ தர்மசாஸ்தா கோவிலில், மகர விளக்கு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.கேரளா மாநிலம், பாலக்காடு நகர் அருகே உள்ள மேற்கு யாக்கரை ஸ்ரீ தர்மசாஸ்தா கோவிலில், ஆண்டு தோறும் மகர விளக்கு உற்சவம் நடக்கிறது. நடப்பாண்டு உற்சவம் இன்று காலை நடை திறப்புடன் துவங்கியது.அதிகாலை 5:00 மணிக்கு மகா கணபதி ஹோமம், 7:00 மணிக்கு மூலவருக்கு உஷ பூஜை. காலை, 9:30 மணிக்கு செண்டை மேளம் முழங்க ஆடை ஆபரணங்கள் அணிந்த "கருவந்தலை கணபதி என்ற யானை மீது புழைக்கல் மகா கணபதி கோவிலில் இருந்து மூலவருக்கு அபிஷேகம் செய்வதற்கான தீர்த்தம் எடுத்து வரும் வைபவம் நடந்தது.அதன்பின், செண்டை மேள வித்வான் வட்டேக்காடு சசியின் குழுவில் உள்ள 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட "பஞ்சாரிமேளம் என அழைக்கப்படும் செண்டை மேளம் முழங்க, மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. காலை 11:00 மணிக்கு புஷ்பாலங்கார பூஜை, 12:00 மணிக்கு உச்சபூஜை, யானைக்கு உணவளிக்கும் "யானை யூட்டு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், செண்டை மேளம் முழங்கு யானை அணிவகுப்புடன் "பாலகொம்பு எழுந்தருளும் நிகழ்ச்சி, விஸ்வேஸ்வரா கோவில் சன்னதியில் இருந்து துவங்கி, சாஸ்தா கோவிலில் வந்தடைந்தது. அதன்பின் ஐயப்பன் பாட்டு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கடந்த 11ம் தேதி முதல் கோவில் வளாக கலையரங்கில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், நாராயணீய பாராயணம், விளக்கு பூஜை ஆகியவை நடந்திருந்தன.
237 days ago
237 days ago
237 days ago