நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
ADDED :615 days ago
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜைகள் நடந்தது. நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் மூலவரும்,உற்சவர் ஊஞ்சல் உற்சவத்திலும் அருள்பாலித்தனர்.பூஜைகளை முருகானந்தம் குருக்கள் செய்தார்.தர்மகர்த்தா சுந்தரமூர்த்தி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.அருள்தரும் ஐயப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.