உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடக்கம்பட்டி முனியாண்டி கோவிலில் பிரியாணி திருவிழா

வடக்கம்பட்டி முனியாண்டி கோவிலில் பிரியாணி திருவிழா

கள்ளிக்குடி; கள்ளிக்குடி தாலுகா வடக்கம்பட்டியில் முனியாண்டி சுவாமி கோயிலில் 90 வது ஆண்டு திருவிழா நடந்தது. இதில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரியாணி பிரசாதமாக வழங்கப்பட்டது.


கள்ளிக்குடி அருகே வடக்கம்பட்டியில் முனியாண்டி சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 2வது வெள்ளிக்கிழமை ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் திருவிழா கொண்டாடுவது வழக்கம். இன்று நடந்த இந்த திருவிழாவில் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்தனர். மேலும் மாலையில் பெண்கள் தங்களது வீடுகளில் இருந்து தேங்காய் பழம் பூ தட்டுக்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதையடுத்து பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு 2500 கிலோ அரிசியில் அசைவ பிரியாணி தயாரிக்கப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டதையடுத்து பக்தர்களுக்கு பிரியாணி பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !