ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர் : போக்குவரத்து நெரிசல்
ADDED :594 days ago
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று விடுமுறை நாள் யொட்டி தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான வாகன வாகனத்தில் பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடினார்கள். பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் பக்தர்கள் காத்திருந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை மற்றும் உள்ளூர் ஆட்டோக்களால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் திட்டக்குடி, மேலவாசல், அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பக்தர்கள் பாதித்தனர். இதனால் போக்குவரத்தை ஒருவழி பாதையாக போலீசார் மாற்றினர்.