உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்லாலிப்பட்டு வள்ளலார் கோவிலில் நன்னீராட்டு பெரு விழா

கல்லாலிப்பட்டு வள்ளலார் கோவிலில் நன்னீராட்டு பெரு விழா

செஞ்சி; கல்லாலிப்பட்டு வள்ளலார் கோவிலில் நன்னீராட்டு பெருவிழா நடந்தது.


வல்லம் ஒன்றியம் கல்லாலிப்பட்டு வள்ளலார் திருச்சபையில் திருக்குடபுனித நன்னீராட்டு விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு செஞ்சி மேல்மலையனூர் வட்ட சன்மார்க்க சங்கத்தினர் அருட்பெருஞ்ஜோதி அகவல் வழிபாடு நடத்தினர், 9.00 மணிக்கு வடலூர் தமிழறிஞர் குருபக்கிரி சுவாமி முன்னிலையில் வள்ளலார் சிலைக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழாவும், அருள் ஒளி திருச்சபை திறப்பு விழாவும் நடந்தது. இதில் மஸ்தான் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வல்லம் ஒன்றிய சேர்மேன் அமுதா ரவிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் துரை, இளம்வழுதி மற்றும் சன்மார்க்க சங்க நிர்வாகிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !