உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகங்கை, உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம்

சிவகங்கை, உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம்

சிவகங்கை; உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோயில் பங்குனி உத்திரம் தேரோட்டம் நடைபெற்றது. தேரில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


உருவாட்டி, பெரியநாயகி அம்மன் கோயிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளினார். விழாவின் 9ம் நாளான இன்று காலை 5:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். சிறப்பு அபிஷேகத்திற்கு பின் தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து அம்மனை வழிபட்டனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !