விருத்தாசலம் பாலமுருகன் கோவில் பங்குனி தேர் திருவிழா
ADDED :185 days ago
விருத்தாசலம்; இந்திராநகர் பாலமுருகன் கோவில் தேர் திருவிழாவில் ஏராளமானோர் தேர் வடம் பிடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விருத்தாசலம் இந்திராநகர் பாலமுருகன் கோவில் பங்குனி உத்திர விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், இரவு வாண வேடிக்கையுடன் சுவாமி வீதியுலா நடந்தது. இன்று 10ம் தேதி காலை 11:00 மணியளவில் நடந்த தேர் திருவிழாவில், பாலவிநாயகர், பாலமுருகன், மாரியம்மன் சுவாமிகள் திருத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். நாளை 11ம் தேதி பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி, காலை 9:00 மணிக்கு மணிமுக்தாற்றில் இருந்து காவடி ஊர்வலம் நடக்கிறது.