உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கருடசேவை; குவிந்த பக்தர்கள்

திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கருடசேவை; குவிந்த பக்தர்கள்

சென்னை ; திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சின்ன காஞ்சிபுரம் என்று அழைக்கப்படும் சென்னை திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் 9ம் தேதி துவங்கி 15ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. வைகாசி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில்  கொடி ஏற்றப்பட்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. தினமும் பெருமாள் வீதி உலா மற்றும்  சந்திரவாகனம், சூரிய வாகனம், ஹனுமந்த வாகனம்,  யானை வாகனம், உள்ளிட்ட சிறப்பு தேரில் வீதி உலா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று காலையில் பெருமாளின் கருட சேவை உற்சவ நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நான்கு மாட வீதிகளிலும் பெருமாள் உலா வந்து அருள் பாலித்தார். இதில் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு வழிபட்டனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !