அரும்பாக்கம் வரதராஜப் பெருமாள் கோவிலில் கருட சேவை உத்சவம்
ADDED :198 days ago
அரும்பாக்கம்; அரும்பாக்கத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்கும் சத்திய வரதராஜப் பெருமாள் கோவிலில், 23ம் ஆண்டு வைகாசி பிரம்மோத்வம், கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாள் உத்சவமான கருட சேவை, நேற்று காலை 6:00 மணிக்கு நடந்தது. கோவில் வளாகத்தில் புறப்பட்டு, பெருமாள் கோவில் தெருக்கள், பிள்ளையார் கோவில் தெரு, பூந்தமல்லி நெடுஞ்சாலை, வள்ளுவர் தெரு, அமராவதி தெரு வழியாக, மீண்டும் கோவிலில் நிறைவடைந்தது. வீதியுலாவில், பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். தொடர்ந்து மாலை, அனுமந்த வாகன வீதி உலா புறப்பாடு நடந்தது.