/
கோயில்கள் செய்திகள் / காணிப்பாக்கம் வரசித்தி விநாயக சுவாமி கோயிலில் ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி தரிசனம்
காணிப்பாக்கம் வரசித்தி விநாயக சுவாமி கோயிலில் ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி தரிசனம்
ADDED :163 days ago
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயக சுவாமி கோயிலில் ஆந்திர மாநில உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீ வி.ராதா கிருஷ்ண கிருபா சாகர் சுவாமி தரிசனம் செய்தார். கோவில் வந்த நீதிபதிக்கு சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்தனர். கோயிலுக்குள் சென்றவர்கள் விநாயகப் பெருமானை சிறப்பு தரிசனம் செய்த நீதிபதிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு, கோயில் தீர்த்தப் பிரசாதங்களையும் சுவாமி திருவுருவப் படத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கோயில் துணை செயல் அதிகாரி ரவீந்திரபாபு, கண்காணிப்பாளர்கள் கோதண்டபாணி, வாசு, கோயில் ஆய்வாளர் பாலாஜி நாயுடு, காணிப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தரணிதரன், சித்தூர் நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.