சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தேரோட்டம் கோலாகலம்
ADDED :164 days ago
கன்னியாகுமரி; சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா 11ம் நாளான இன்று, ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் தேரோட்டம் நடந்தது.
கன்னியாகுமரி, சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும் வைகாசி திருவிழா 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பணிவிடைகள், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி மற்றும் அய்யாவழி சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் 11ம் நாளான இன்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து திருக்கொடி இறக்கம் நடக்கிறது.