உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் தெப்பத் திருவிழா.

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் தெப்பத் திருவிழா.

காரைக்குடி; காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி திருவிழாவையொட்டி தெப்பத் திருவிழா நடந்தது.


தென்திருப்பதி என்று அழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி திருவிழா கடந்த மே 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி சிம்ம, ஹனுமந்த, யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும் ஜூன் 8 திருக்கல்யாணமும் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த ஜூன் 11ம் தேதி நடந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு, தெப்பத் திருவிழா நடந்தது. இதில் அரியக்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் ஏராளமான கலந்து கொண்டனர். தொடர்ந்து, புஷ்ப பல்லாக்கும், விடையாற்றியும் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் முத்துமீனாட்சி, செயல் அலுவலர் விநாயகவேல் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !