உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி பெருமாளுக்கு 73 மொபைல் போன்கள் நன்கொடை

திருப்பதி பெருமாளுக்கு 73 மொபைல் போன்கள் நன்கொடை

திருப்பதி; திருமலை திருப்பதி கோயில் மற்றும் உப கோயில்களின் உண்டியல்களின் போடப்பட்ட 73 மொபைல் போன்கள் ஏலம் விடப்பட்டு கோயில் நிதியில் சேர்க்கப்படவுள்ளது. திருமலை திருப்பதி கோயில் உண்டியலில் பக்தர்கள் பணம்,நகை மட்டுமின்றி தங்களுக்கு பிரியப்பட்ட பல்வேறு பொருட்களை நன்கொடையாக உண்டியலில் காணிக்கையாக போட்டுவருகின்றனர் உண்டியலில் போடமுடியாத வாகனங்கள் போன்ற விஷயங்களை நேரிடையாக கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஐபோன், சாம்சங்,விவோ, ரியல்மீ, மோட்டோரேலா என பிரபல நிறுவனங்களின்   மொபைல் போன்கள் உண்டியலில் போடப்பட்டுள்ளது. இதில்  பெரும்பாலான போன்கள் திருமலை கோயில் உண்டியலில் போடப்பட்டதாகும். இந்த மொபைல் போன்கள்  யாவும் ஆகஸ்ட் 4 மற்றும் 5 தேதிகளில் மின்னனு ஏலமாக விற்கப்பட்டு அந்த பணம் கோவில் நிதியில் சேர்க்கப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !