காளஹஸ்தி கோவிலுக்கு ரூ.12 லட்சம் மதிப்புள்ள நெக்லஸ் நன்கொடை அளித்த பக்தர்
ADDED :122 days ago
ஸ்ரீகாளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ஸ்ரீ காளஹஸ்தி நகரைச் சேர்ந்த டி. ஸ்ரீஹரி சங்கர் அவதானி & டி. பத்மாவதி ஆகியோர் சுமார் 0.90.680 கிராம் எடையுள்ள 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நெக்லஸ் நன்கொடை அளித்தனர். காளஹஸ்தி கோயில் செயல் அலுவலர் பாபி ரெட்டியிடம் நன்கொடையாக வழங்கினர். முன்னதாக நன்கொடை யாளர்களுக்கு கோயில் அதிகாரிகள் சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர். கோயில் வளாகத்தில் தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்தப் பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர்.