உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

விழுப்புரம் லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

விழுப்புரம்; லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில் திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் அருகே வாணியம்பாளையம், கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலில், திருக்கல்யாண உற்சவம், இன்று காலை 9:00 மணிக்கு தொடங்கியது. மூலவருக்கும், உற்சவருக்கும் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து பூக்கள், துளசியால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் கனகவல்லி தாயாருடன் மூலவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிறகு நாலாயிர திவ்ய பிரபந்தம் வாசிக்கப்பட்டது. மாலையில், உற்சவர் பெருமாளுக்கும், கனகவல்லி தாயாருக்கும் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சாற்று முறை  செய்யப்பட்டு இரவு 8.00 மணிக்கு மேளதாளம் முழங்க திருக்கல்யாணம் நடக்கிறது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !