உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெண்ணை காப்புடன் ராஜஅலங்காரத்தில் அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு

வெண்ணை காப்புடன் ராஜஅலங்காரத்தில் அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு

கோவை; பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.


ஆஞ்சநேயரின் தரிசனம் சிவ தரிசனத்திற்கு ஒப்பானது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப இங்கு சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இங்கு ஆஞ்சநேயரின் வலது உள்ளங்கை மத்தியில் மகாலட்சுமி அமர்ந்திருக்கிறாள். இதனால் அஷ்டலட்சுமிகளின் அனுக்கிரகம் கிடைக்கிறது.  இத்தகைய சிறப்பு மிக்க இத்தலத்தில் ஆடி மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது, இதில் வெண்ணை காப்புடன்  ராஜஅலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள்கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !