திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் யாகசாலை பூஜை துவக்கம்
ADDED :51 days ago
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை (ஆக. 29) நடக்கும் மண்டலாபிஷேகத்திற்காக இன்று யாகசாலை பூஜை துவங்கியது.
கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடந்தது. ஜூலை 15 முதல் மண்டல பூஜை துவங்கியது. மண்டல பூஜையின் நிறைவு, மண்டலாபிஷேகம் துவக்கமாக இன்று மாலையில் கோயில் திருவாட்சி மண்டபத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு முதல் கால யாக பூஜை முடிந்து தீபாராதனை நடந்தது. நாளை காலை விக்னேஷ்வர பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை முடிந்து மூலவர்களுக்கு அபிஷேகம் நடக்கிறது.