கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஹயக்ரீவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :396 days ago
கோவை; கோவை உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் துளசி மற்றும் புஷ்ப அலங்காரத்தில் லட்சுமி ஹயக்ரீவர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.