புரட்டாசி வெள்ளி; பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :323 days ago
கோவை; கோவை ராம் நகர் பட்டேல் ரோடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் புரட்டாசி மாதம் முதல் வெள்ளி கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. இதில் உற்சவமூர்த்தி வள்ளி தேவசேனா சமேதராக சிறப்பு புஷ்ப அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.