திருச்செந்தூர் கோயில் கோபுரத்தில் மயில் ரூபத்தில் வந்த முருகன்..!; மெய்சிலிர்த்த பக்தர்கள்
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 22ஆம் தேதி யாகசாலையுடன் தொடங்கியது. விழாவின் சிகர நாளான இன்று மாலை சூரசம்காரம் நடக்கிறது. இதையொட்டி நாளை அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு விஸ்வரூப தீபாராதனை உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறும் நிலையில், திருச்செந்தூரில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இன்று மாலை 4:30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்காரத்திற்கு எழுந்தருளி சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நடக்கிறது இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசிக்க உள்ளனர். இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயில் கோபுரத்தின் மேல் நடந்த அதிசயம் பகதர்களை மெய்சிலிர்க்க வைத்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தின் நடுவே மயில் ஒன்று கோபுரத்தின் மேல் வந்து அமர்ந்தது. நீண்ட நேரம் இருந்த மயில் கோபுரத்தின் கிழ் உள்ள பக்தர்களை பார்த்தபடி இருந்தது. இதை கண்ட பக்தர்கள் முருகனே மயில் ரூபத்தில் வந்ததாக பரவச தரிசனம் செய்தனர்.