உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ சென்னியாண்டவர் கோவிலில் நாளை கல்யாண உற்சவ விழா

ஸ்ரீ சென்னியாண்டவர் கோவிலில் நாளை கல்யாண உற்சவ விழா

கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி ஸ்ரீ சென்னியாண்டவர் கோவிலில் நாளை கல்யாண உற்சவம் நடக்கிறது.


கருமத்தம்பட்டி அடுத்த விராலிக்காடு ஸ்ரீ சென்னியாண்டவர் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹார விழா, கடந்த ஐந்து நாட்களாக நடந்து வருகிறது. இன்று சஷ்டி விழாவும், சம்ஹார திருவிழாவும் நடக்கிறது. நாளை காலை, 8:30க்கு திருக்கல்யாண உற்சவம் துவங்குகிறது.


அழைப்பிதழில் புதுமை: திருக்கல்யாண உற்சவ அழைப்பிதழை பக்தர்கள் புதுமையாக வடிவமைத்து உள்ளனர். கைலாசபதி சிவபெருமான்- பார்வதி தம்பதியின் இளைய குமாரன் தேவ சேனாதிபதியான சென்னியாண்டவருக்கும், இந்திரலோக அதிபதி இந்நிரதேவன் - இந்திராணி தம்பதியின் திருக்குமாரத்தி இந்திர லோகத்து இளவரசியான தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடக்க உள்ளதையும், மணமக்களின் பெற்றோர் அழைப்பது போல் அழைப்பிதழை வடிவமைத்து பக்தர்களுக்கு வழங்கியுள்ளனர். மேலும் சமூக வலைத்தள குழுக்களில் அனுப்பி திருக்கல்யாணத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !