உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்கந்தகிரியில் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம்

ஸ்கந்தகிரியில் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம்

ஹைதராபாத்; பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் நேற்று (அக்.29 ல்) மாலை செகந்திராபாத் ஸ்கந்தகிரியில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் அனுமன் மந்திருக்கு வந்தடைந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. அனுமனை தரிசித்த சுவாமிகள், ஸ்கந்தகிரி ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவிலின் கும்பாபிஷேகத்தை ஆசீர்வதித்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். சுவாமிகள், நாளை அக்., 31ல் ஸ்ரீ சுப்ரமணியசுவாமி தேவஸ்தானத்தில் ஸ்வர்ண ரதத்தை திறந்து வைக்க உள்ளார். சிறப்பு பூஜைகளுக்கு பின் நவ., 1ம் தேதி அதிகாலை கல்வபுக்கத்திற்குப் புறப்படுவார் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !