உத்தரகோசமங்கையில் பஞ்சமூர்த்தி புறப்பாடு
ADDED :4666 days ago
கீழக்கரை: ராமநாதபுரம், உத்தரகோசமங்கை மங்கள நாதசுவாமி கோயிலில், "ஆருத்ரா தரிசன விழா, பஞ்சமூர்த்தி புறப்பாடுடன், டிசம்பர் 28 நிறைவடைந்தது. இக்கோயிலில் உள்ள மரகத நடராஜருக்கு, தமிழகத்தில் பஞ்ச சபைகளுக்கு ஈடான முக்கியத்துவம் உண்டு. இங்கு, டிசம்பர் 27 , நடராஜருக்கு சந்தனம் களைதல், மகா அபிஷேகம், ஆருத்ரா அபிஷேகம், சந்தனம் சார்த்துதல் நடந்தது.டிசம்பர் 28 காலை, மரகத நடராஜரை, ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். கூத்தபெருமாள் வீதி உலா, மாலையில் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. இரவில், மாணிக்கவாசக சுவாமிகளுக்கு காட்சி தந்த நடராஜர், வெள்ளி ரிஷிப வாகனத்தில் எழுந்தருளினார். பஞ்சமூர்த்தி புறப்பாடுடன், விழா நிறைவடைந்தது.