உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் முதல் நாளில் அலைமோதும் பக்தர்கள்; இருமுடி கட்டுடன் குவிந்தனர்

சபரிமலையில் முதல் நாளில் அலைமோதும் பக்தர்கள்; இருமுடி கட்டுடன் குவிந்தனர்

சபரிமலை:  பக்தர்களின் சரண கோஷம் முழங்க சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல காலம் தொடங்கியது. கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை சபரிமலையில் ஒரு மண்டல காலமாகும். இதற்காக நேற்று மாலை 5.00 மணிக்கு மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்த போது பக்தர்கள் சரண கோஷம் எழுப்பினர். தொடர்ந்து கோயிலை வலம் வந்த மேல் சாந்தி 18 படிகள் வழியாக வந்து ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்த்தார். பின்னர் 18 படிகளுக்கு கீழே இருமுடி கட்டுடன் நின்று கொண்டிருந்த புதிய மேல் சாந்திகள் சபரிமலை பிரசாத் நம்பூதிரி, மாளிகைப் புறம் மனு நம்பூதிரி ஆகியோரை கைப்பிடித்து அழைத்து வந்தார். ஸ்ரீ கோயில் .


இன்று அதிகாலை 3.00 மணிக்கு புதிய மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியதும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கியது. தொடர்ந்து தந்திரி மகேஷ் மோகன ரரு ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்திய பின்னர் நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்தார். பின்னர் கோயில் முன்புறமுள்ள மண்டபத்தில் கணபதி ஹோமமும் விழக்கமான பூஜைகளும் நடைபெற்றது. கார்த்திகை ஒன்றாம் தேதி ஆன இன்று அதிகாலையிலேயே பக்தர்களின் நீண்டைக்கு காணப்பட்டது 18 படிகளில் ஏறுவதற்கு பக்தர்களின் நெரிசல் அதிகமாக இருந்தது. முதல் நாளில் சுமார் 40,000 ஆயிரத்திற்கும் மேலான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் ஆன்லைன் முன்பதிவில்  70 ஆயிரம் பக்தர்களும், ஸ்பாட் புக்கிங்கில் 20 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப் படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !