உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேண்டியதை நிறைவேற்றும் சேம்புலிபுரம் ஸ்ரீ ஆறுமுக பக்த ஆஞ்சநேயர்

வேண்டியதை நிறைவேற்றும் சேம்புலிபுரம் ஸ்ரீ ஆறுமுக பக்த ஆஞ்சநேயர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இயற்கை எழில் மிக்க இடைக்கழிநாடு பகுதிக்கு உட்பட்ட சேம்புலிபுரம் கிராமத்தில் தேசிங்கு நாயக்கர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஸ்ரீ ஆறுமுக பக்த ஆஞ்சநேயர் அமைந்துள்ளது. மூலவர் விக்ரகமாக 13 அடி உயர ஸ்ரீ ஆறுமுக பக்த ஆஞ்சநேயர் எழுந்தருயுளிள்ளார்.


சராமர்பாலம் கட்டப்பட்ட மிதக்கும் கல் கோவிலில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. ராமர்,சீதா,லஷ்மணனுக்கு புதிய கோவில் மற்றும் மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. ஙநாடிவரும் பக்தர்கள் வேண்டியதை நிறைவேற்றி , அனைத்து விதமான தோஷங்களை நீக்கும் சக்திபெற்ற கோவில் என்ற பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கவடை மாலை, வெற்றிலை மாலை, துளசி மாலை மற்றும் வேண்டுதல் நிறைவேற ஸ்ரீ ராம ஜெயம் எழுதி மாலை செலுத்துவதால் நினைப்பது நடப்பதாக கூறப்படுகிறது. ஆஞ்சநேயருக்கு துளசி இலை செந்துாரம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.சனிக்கிழமைகளில் வெற்றிலையில் வெண்னெய் பிரசாதமாக வழங்குவது இந்த கோவிலின் சிறப்பு. கோவில் அமைவிடம் சென்னையில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில், இடைக்கழிநாடு கடப்பாக்கம் பகுதியில் சேம்புலிபுரம் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலை அருகே அமைந்துள்ளது. சிறப்பு பூஜைகள் மார்கழி மாதம் தினசரி காலை நித்ய பூஜை நடக்கிறது, பிரதி சனிக்கிழமை சிறப்பு பூஜை நடக்கும், அனுமன் ஜெயந்தி, புத்தாண்டு, பங்குணி உத்திரத்தில் சீதா ராமர் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.


நடைதிறப்பு: காலை : 09:00 -– 11:00 மணி வரைமாலை 5:00 – 7:00 மணி வரை

தொடர்புக்கு: ஸ்ரீ ஆறுமுக பக்த ஆஞ்சநேயர் ஸ்ரீ ராமர் லட்சுமணர் சீத்தாதேவி அறக்கட்டளை

ஆலய நிர்வாகி: வசந்தா தேசிங்கு செல் எண் : 9443957395/ 9786277737


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !