உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா

தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனுார் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது.


விநாயகர் கோவிலில் மார்கழி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று மாலை பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், திராட்சை உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து யாகசாலை வேள்வியும், பூஜிக்கப்பட்ட கலசங்கள் உட்பிரகாரம் வலம் வந்து, 108 சங்காபிஷேகம், கலச நீரால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கோவில் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சியை தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !