உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயிலில் விஷ்ணுபதி புண்ணிய கால பூஜை

சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயிலில் விஷ்ணுபதி புண்ணிய கால பூஜை

தேவகோட்டை; நித்திய கல்யாணிபுரம் சவு பாக்ய துர்க்கை அம்மன் கோயிலில் மாசி முதல் தேதி விஷ்ணு பதி புண்ணிய காலத்தை முன்னிட்டு சங்கு சக்கரம் கொண்ட சவு பாக்ய துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பெண்கள் பக்தி பாடல்கள் வழிப்பட்டனர். கோதண்டராமர் கோயில், ரங்கநாத பெருமாள் கோயிலில் விஷ்ணு பதி புண்ணிய காலம், மாத ஏகாதசியும் சேர்ந்து வந்த சிறப்பு தினத்தை முன்னிட்டு பெருமாள், விஷ்ணுவுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !