உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷபம் : சனிப்பெயர்ச்சி பலன் 2026 - 2028

ரிஷபம் : சனிப்பெயர்ச்சி பலன் 2026 - 2028

கார்த்திகை: யோக காலம்


ஆத்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1 ம் பாதமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசி நாதனாகவும், 2,3,4 ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர். உங்கள் நட்சத்திராதிபதி சூரியனுக்கு சனி பகைவர் என்றாலும் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்கக் கூடியவராகிறார்.
கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு சனி பகவான் விரய ஸ்தானத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு லாப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் செலவையும், அலைச்சலையும், உடல் நலிவையும் உண்டாக்குவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு லாபத்தையும், யோகத்தையும் வழங்குவார் என்பது பொதுப்பலனாகும். ஆனால், இக்காலத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகள், சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலை, திசா புத்திக்கேற்ப இப்பலன்களில் ஒவ்வொருவருக்கும் சில மாற்றம் ஏற்படும். 

பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு செல்வதால், கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு இக்காலத்தில் விரய சனியின் சங்கடப் பலன்கள் விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு இக்காலத்தில் லாப சனியால் ஏற்படும் பலன்களில் சிறிய தடைகள் ஏற்படும். முயற்சிக்கேற்ற ஆதாயமும், சுய ஜாதகத்தில் திசா புத்தி சாதகமாக இருந்தால் அதனால் யோகப்பலன்களும் உண்டாகும்.

ராகு - கேது சஞ்சாரம்
கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு நவ.13, 2026 வரை ராகு லாப ஸ்தானத்திலும், கேது பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பார்.
நவ.13, 2026 முதல் ராகு ஜீவன ஸ்தானத்திலும் கேது சுக ஸ்தானத்திலும் சஞ்சரிப்பார். இதனால் நவ, 13, 2026 வரை யோகப்பலன்கள் அதிகரிக்கும். விரய சனியால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். 2,3,4 ம் பாதத்தினருக்கு நவ. 13, 2026 வரை ராகு ஜீவன ஸ்தானத்திலும், கேது சுக ஸ்தானத்திலும் சஞ்சரிப்பார். நவ.13, 2026 முதல் ராகு பாக்ய ஸ்தானத்திலும், கேது சகாய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பார். இதனால் நவ. 13, 2026 முதல் சர்ப்ப கிரகங்கள் லாபத்தை வழங்குவர். முயற்சியை வெற்றியாக்குவர். முன்னேற்றத்தை உண்டாக்குவர்.

குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 -  ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக
1ம் பாதத்தினருக்கு, மிதுனத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் திருமணத்திற்காக மேற்கொள்ளும் முயற்சியை வெற்றியாக்குவார். வேலைக்காக எடுக்கும் முயற்சியை சாதகமாக்குவார். புதிய தொழில், சமூகத்தில் அந்தஸ்து என்ற நிலையை உருவாக்குவார். கடகத்திலும், கன்னியிலும் சஞ்சரிக்கும் காலங்களில் விரய சனியின் பாதிப்புகளை விலக்குவார். உத்தியோகம், தொழிலில் நிம்மதியை ஏற்படுத்துவார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் செல்வாக்கை அந்தஸ்தை உயர்த்துவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு மிதுனத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் வருமானம் அதிகரிப்பார். குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார். கடகத்திலும் கன்னியிலும் சஞ்சரிக்கும் காலத்தில் திருமணம், குழந்தை பாக்யம், வீடு வாசல், ஆடை ஆபரணம் என்று சேரும். சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் வேலை, தொழில் என்ற கனவு நனவாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்

பொதுப்பலன்
திட்டமிட்டு செயல்படும் வேலைகளில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். வியாபாரம், தொழில் லாபம்தரும். கையில் பணம் புழங்கும். பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் கை கூடிவராத வேலைகள் இப்போது முடிவிற்கு வரும். இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள் நீங்கும். ஒருசிலர் புதிய தொழில் தொடங்குவீர். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். புதிய தொழில், உடல்நிலை சீராகும். பொது வாழ்வில் இருப்போரின் செல்வாக்கு உயரும்.

தொழில் 
தொழில் காரகன் சனி சஞ்சாரத்தால் தொழிலில் இருந்த தடைகள் விலகும். முடங்கிக்கிடந்த தொழில்களும் முன்னேற்றம் அடையும். இன்டஸ்ட்ரீஸ், ஹார்ட்வேர், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர்ஸ், அலைபேசி, ஆடை ஆபரண விற்பனை முன்னேற்றமடையும். சினிமா, சின்னத்திரை, யூட்யூப், பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு ஆதாயம் கூடும்.

பணியாளர்கள்
கௌரவக்குறைவு ஏற்படும் இடத்தில் இருக்க விரும்பாத உங்களுக்கு மீன சனியின் காலம் யோக காலமாகும். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். மெமோ, வேலையில் பிரச்சனை, பதவி உயர்வில் தடை என்றிருந்த நிலை மாறும். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

பெண்கள்
படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். சுயதொழில் செய்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். ஆதாயம் கூடும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். குழந்தைக்காக ஏங்கியோரின் ஏக்கம் தீரும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

கல்வி
படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும். உயர் கல்வி, எதிர்காலம் என்று உங்கள் மனம் சிந்திக்கும். ஆசிரியர்கள் வழங்கும் ஆலோசனையை  பயன் தரும். பொதுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் வாய்ப்புண்டாகும்

உடல்நிலை
ஆயுள் காரகன் சனியால் உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். நீண்டநாட்களாக வாட்டி வதைத்து வந்த நோய்களும் மருத்துவ சிகிச்சையால் குணமாகும். ஆரோக்யமாகவும் சுறு சுறுப்பாகவும் செயல்படத் தொடங்குவீர்கள்

குடும்பம் 
வியாபாரம் தொழிலில் லாபம் அதிகரிப்பதுடன், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் உயர்வு உண்டாகும் என்பதால் குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் மேற்படிப்பு, திருமண முயற்சி வெற்றியாகும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

பரிகாரம்: அதிகாலையில் சூரிய பகவானை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.


ரோகிணி நல்ல நேரம் வந்தாச்சு


மனோகாரகன் சந்திரன், அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இதுவரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து வேலையில் நெருக்கடி, வியாபாரத்தில் லாபமற்றநிலை, குடும்பத்தில் போராட்டம், உடல்நிலையில் சங்கடம், வீண் அலைச்சலுடன் செலவு என்று பாடாய் படுத்தி வந்த சனி பகவான், மார்ச். 6, 2026 அன்று உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான மீன ராசியில் சஞ்சரிக்கப் போகிறார் என்பதால் உங்களுக்கிருந்த பிரச்சனைகள், போராட்டங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். அரசு வழியில் உங்களுக்கேற்பட்ட சோதனைகள், நீங்கள் மேற்கொண்ட முயற்சியில் ஏற்பட்ட தடைகள் எல்லாம் விலகுவதுடன் இனி அனைத்திலும் லாபம், யோகம் என்ற நிலையை அடைவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். மூடி வைத்திருந்த தொழில்கூடங்கள் மீண்டும் செயல்பட ஆரம்பிக்கும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் கூடும், பணப்புழக்கம் அதிகரிக்கும், சேமிப்பு உயரும் என்றாலும், சனி பகவான் உங்கள் ராசியையும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், அஷ்டம ஸ்தானத்தையும் பார்ப்பதால் அனைத்திலும் நிதானமும் பொறுமையும் அவசியம்.

பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு செல்வதால், இக்காலங்களில் அவருடைய பார்வைகளால் ஏற்படும் பாதகப்பலன்கள் குறையும். ஆரோக்கியம் சீராகும். பிள்ளைகள் குறித்த கவலை நீங்கும். சொத்து விவகாரம் சாதகமாகும். மறைமுகத் தொல்லைகள் விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். 

ராகு - கேது சஞ்சாரம்
நவ. 13, 2026 வரை ராகு, உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான கும்பத்திலும், கேது, சுக ஸ்தானமான சிம்மத்திலும் சஞ்சரிப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். உழைப்பு கூடும். ஒய்வு உறக்கமின்றி வேலைகள் இருந்து கொண்டிருக்கும். ஐ.டி. பீல்டில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். நவ.13, 2026 முதல் ராகு பாக்ய ஸ்தானமான மகரத்திலும், கேது, சகாய ஸ்தானமான கடகத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். செல்வமும் செல்வாக்கும் உயரும். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும் என்பதுபோல் எடுக்கும் வேலைகள் எல்லாம் லாபமாகும். பொருளாதார நிலை உயரும். நீங்களே நம்ப முடியாத அளவில் உங்கள் வாழ்க்கை வளமாகும். நீண்டநாள் கனவுகள் நனவாகும்.

குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 -  ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இக்காலங்களில் மிதுனத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் வருமானத்தை அதிகரிப்பார். குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார். உடல்நிலையில் இருந்த சங்கடத்தை நீக்குவார். வம்பு, வழக்கு, பிரச்சனைகளில் வெற்றியை உண்டாக்குவார். கடகத்திலும் கன்னியிலும் சஞ்சரிக்கும் காலத்தில் திருமணம், குழந்தை பாக்யம், வீடு, ஆடை ஆபரணம் என்ற கனவை நனவாக்குவார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் வேலை வாய்ப்பு, வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு, புதிய தொழில், செய்துவரும் தொழிலில் ஆதாயம் என்று சாதகமான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும்.

பொதுப்பலன்
மீன சனியால் உங்கள் வாழ்க்கை வளமாகும். பொருளாதார நிலை மேம்படும், சேமிப்பு உயரும். புதிய சொத்து சேரும். ஆரோக்கியம் சீராகும். எதிர்ப்பு விலகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். கடன்கள் அடைபடும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். மனதில் நிம்மதி உண்டாகும். கையில் பணம் புழங்கும்.

தொழில் 
உங்கள் ராசிக்கு பாக்யாதிபதியும்  ஜீவனாதிபதியும் சனி பகவான் என்பதால் அவர் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலம் உங்களுக்கு யோக காலமாகும். செய்துவரும் தொழில் லாபத்தை நோக்கிச்செல்லும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசுவழியில் எதிர்பார்த்த அனுமதியும் சலுகையும் கிடைக்கும். வாகன உற்பத்தி, ஸ்பேர் பார்ட்ஸ், இண்டஸ்ட்ரீஸ், ஹார்டுவேர், ஸ்டேஷனரி, அழகு சாதனம், நவீன சாதனம் தயாரிப்பு, கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், ஸ்டேஷனரி, சினிமா, சின்னத்திரை, பங்கு வர்த்தகம், ஆடை ஆபரணம் விற்பனை லாபம் தரும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்

பணியாளர்கள்
உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மொமோ, சஸ்பெண்ட் என்று தொல்லைகளை சந்தித்து வந்தவர்களுக்கு மீண்டும் வேலையும் எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த சலுகைகளும் கௌரவமும் கிடைக்கும். ஒருசிலர் வேறு நிறுவனங்களுக்கு இடம் மாறுவீர்.

பெண்கள்
மனதில் இருந்த குழப்பம் விலகும். உடல்நிலை சீராகும். 
வேலைக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். பணியில் இருப்பவர்களுக்கு இழுபறியாக இருந்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவு நனவாகும். சுயதொழில் செய்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். கையில் பணம் புரளும். தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்ப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கணவரை விட்டு விலகி இருந்தவர்கள் மீண்டும் சேரும் நிலை உண்டாகும். பொன், பொருள், வீடு, மனை என்று வாங்குவீர். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

கல்வி
படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பொதுத்தேர்வு போட்டித்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லூரியில், விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். சிலர் உயர் கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு என்றும் செல்வீர்கள்.

உடல்நிலை
ஆயுள் காரகன் ராசியையும், அஷ்டம ஸ்தானத்தையும் பார்ப்பதால் உடல்நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும். தொற்றுநோய், பரம்பரை நோய், அஜீரணக்கோளாறு, அல்சர் என்று உங்களை சங்கடப் படுத்தும் என்றாலும் அவை மருத்துவத்திற்கு கட்டுப்படும், மருத்துவமனைக்குப் போவதும், மருத்துவச்செலவும் குறையும்.

குடும்பம் 
குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல் படுவீர்கள். உறவினர்களுடன் ஏற்பட்ட பிரச்சனைகள், கடன்தொல்லை யாவும் விலகும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். புதிய சொத்து சேரும். ஒருசிலர் சொந்த வீட்டில் குடியேறுவீர்கள்.

பரிகாரம்: ராஜ ராஜேஸ்வரியை வழிபட வாழ்வில் வளமும் நலமும் உண்டாகும்.


மிருகசீரிடம்: உழைப்பு உயர்வுதரும்


தைரிய வீரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசி நாதனாகவும், 3,4ம் பாதமான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர். உங்கள் நட்சத்திராதிபதி செவ்வாய்க்கு சனி பகைவர் என்றாலும் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்கக் கூடியவராகிறார். மிருகசீரிடம் 1,2ம் பாதத்தினருக்கு சனி பகவான் லாப ஸ்தானத்திலும், 3,4ம் பாதத்தினருக்கு ஜீவன ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் லாபத்தையும், யோகத்தையும், முன்னேற்றத்தையும் உண்டாக்குவார். 3,4ம் பாதத்தினருக்கு செய்துவரும் தொழில், பார்த்துவரும் உத்தியோகத்தில் உழைப்பையும், நெருக்கடிகளையும், போராட்டங்களையும் அதிகரித்திடுவார். ஆனால், இக்காலத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகள், சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலை, திசா புத்திக்கேற்ப இப்பலன்களில் ஒவ்வொருவருக்கும் சில மாற்றம் ஏற்படும். 

பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு செல்வதால், மிருகசீரிடம் 1,2ம் பாதத்தினருக்கு இக்காலத்தில் லாப சனியின் பார்வைகளால் ஏற்படும் சங்கடப் பலன்கள் இருந்த இடம் தெரியாமல் போகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். மறைமுகத்தொல்லைகள் நீங்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். 3,4ம் பாதத்தினருக்கு இக்காலத்தில் ஜீவன சனியால் ஏற்படும் சங்கடப் பலன்கள் விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.

ராகு - கேது சஞ்சாரம்
மிருகசீரிடம் 1,2ம் பாதத்தினருக்கு நவ.13, 2026 முதல் ராகு பாக்ய ஸ்தானத்திலும், கேது சகாய ஸ்தானத்திலும் சஞ்சரித்து யோகப் பலன்களை அதிகரிப்பர். பணவரவை உண்டாக்குவர். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்துவர்.
3,4 ம் பாதத்தினருக்கு
நவ.13, 2026 வரை ராகு பாக்ய ஸ்தானத்திலும் கேது சகாய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக்கும்.

குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 -  ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக 1,2ம் பாதத்தினருக்கு, மிதுனத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கடன்கள் அடைபடும். உடல்நிலை சீராகும். மறைமுகத்தொல்லைகள் விலகும். கடகம், கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில்
திருமணம், குழந்தை பாக்யம், வேலை, தொழில், வீடு, தொழில் என்ற எண்ணம் பூர்த்தியாகும். சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்துவார். உத்தியோகம் தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். 3,4ம் பாதத்தினருக்கு மிதுனத்திலும் சிம்மத்திலும் சஞ்சரிக்கும் காலத்தில் திருமண வயதினருக்கு திருமணம், குழந்தை பாக்யம், வேலை, வீடு, வாகனம் என்ற கனவை நனவாக்குவார். வருமானத்தை அதிகரிப்பார். குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார். கடகத்திலும் கன்னியிலும் சஞ்சரிக்கும் காலத்தில் சனி பகவானால் ஏற்படும் நெருக்கடிகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். உடல்நிலை சீராகும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை இருந்த இடம் தெரியாமல் செய்வார்.

பொதுப்பலன்
வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம்வரும். சேமிப்பு உயரும். இழுபறியாக இருந்த வேலைகள் இப்போது முடிவிற்கு வரும்.  குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். அரசியல்வாதிகள் மற்றும் பொது வாழ்வில் இருப்போரின் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும்.

தொழில் 
தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். பணியாளர் ஒத்துழைப்பு கூடும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.
விவசாயம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், மருந்தகம், கெமிக்கல், பெட்ரோல், நிதிநிறுவனம், ஷேர் மார்க்கெட் தொழில்கள் லாபம் தரும். மருத்துவர்கள், காவல்துறையினர், ஆசிரியர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் முன்னேற்றமடைவர்.

பணியாளர்கள் வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசு பணியில் வழக்கு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலைக்கிடைக்கும். தகுதி இல்லாத இடத்தில் அமர்த்தி வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு மீண்டும் தகுதியான இடத்தில் போஸ்டிங் கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்கள் நிரந்தரமாவர்.

பெண்கள்
சமூகத்தில் தனி மரியாதை ஏற்படும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். குழந்தைக்காக ஏங்கியோரின் ஏக்கம் தீரும்.

கல்வி
படிப்பில் அக்கறை உண்டாகும். உயர்கல்வி கனவு நனவாகும். சிலருக்கு வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் வாய்ப்புண்டாகும். 

உடல்நிலை
நீண்ட நாட்களாக சங்கடப்படுத்தி வந்த நோய்கள் மருத்துவ சிகிச்சையால் குணமாகும். ஆரோக்யமாக செயல்படக்கூடிய அளவிற்கு உடல்நிலை முன்னேற்றமடையும்.

குடும்பம்  
குடும்பத்தில் இருந்த குழப்பம், நெருக்கடி நீங்கும். கையில் பணம் புழங்கும். சேமிப்பு உயரும். புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். தம்பதிக்குள் இருந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும். தம் குடும்பம், தம் பிள்ளைகள், எதிர்காலம் என்ற எண்ணத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும்.

பரிகாரம்:மருதமலை முருகனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !