தஞ்சாவூர் பெரிய கோவிலில் 100 ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தும் பணி
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் மேற்பட்ட இடங்களில், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டிருந்தன. அவை பழுதாகி விட்டன. இதையடுத்து, தொல்லிய துறை சார்பில், 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கோவில் வெளிபிரகாரம், உள்பிரகாரம், திருச்சுற்றுமாளிகை, கேரளானந்தன் நுழைவாயில், மராட்டா கோபுரம், ராஜராஜன் நுழைவாயில் உட்பட, பல இடங்களில், 100 கேமராக்கள் பொருத்தும் பணி தற்போது துவங்கி உள்ளது. இதி ல், வெளிப்பகுதிகளில், 6 மெகா பிக்சல் திறனுடன் வெளிச்சத்தில் படப்பதிவு செய்யும், 73, ‘புல்லட்’ கேமராக்கள்; சன்னிதி உட்புறங்களில், வெளிச்சமில்லாத போதும் படப்பதிவு செய்யும், 6 மெகா பிக்சல் திறனுடன், 25, ‘டூம்’ கேமராக்கள், ராஜராஜன் நுழைவாயில், கோவில் விமானம் எதிரே, 360 டிகிரி கண்காணிக்கும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.