தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி
ADDED :54 days ago
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாசி மாதம், திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு, கோவிலில் உள்ள 32 அடி உயர கல் கம்பத்தில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் முனுசாமி செய்திருந்தார்.