உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றக்குடியில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்; மார்ச் 31 தேரோட்டம்

குன்றக்குடியில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்; மார்ச் 31 தேரோட்டம்

 காரைக்குடி;குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மார்ச் 22ம் தேதி மாலை 5:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடந்தது. இன்று காலை கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தினமும் இரவு, சண்முகநாதன் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். மார்ச் 27ம் தேதி மாலை திருக்கல்யாணம், பூப்பல்லாக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மார்ச் 30ம் தேதி தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. மார்ச் 31ம் தேதி காலை 5:30 மணிக்கு தேருக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் மாலை 5:00 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. ஏப். 1 ம் தேதி காலை தீர்த்தவாரியும், இரவு மயிலாடும்பாறையில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பங்குனி உத்திரம் அன்று ஏராளமான பக்தர்கள் தீமிதித்தும் பால்குடம் எடுத்தும் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர். விழா ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !