பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழா கொடியேற்றம்
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திரத் தேர்திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றம் கோலாலமாக நடந்தது.
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. பங்குனி உத்திரத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றம் நடந்தது. பக்தர்கள் ‘அரோஹரா’ கோஷத்துடன் கம்பத்தில் ரிஷப கொடி ஏற்றப்பட்டது. தீபாராதனை நடந்தது. உற்ஸவர் வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்ரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி, விநாயகர், சண்டிகேஸ்வரருக்கு தீபாராதனையை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் முக்கிய திருவிழாவான 9ம் நாள் திருவிழா மார்ச் 31ல் தேரோட்டம் நடக்கிறது. தினமும் இரவு 7:00 மணிக்கு நகரின் முக்கிய வீதிகளில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திருப்பணிக்குழுவினர்கள் சசிதரன், சிதம்பர சூரியவேலு, பா.ஜ., செயற்குழு உறுப்பினர் கோபிக்கண்ணன், செயல் அலுவலர் சுந்தரி உட்பட பலர் பங்கேற்றனர்.