உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூமிநாதசுவாமி மீது சூரியக்கதிர்கள் விழும் அதிசய நிகழ்வு; பக்தர்கள் தரிசனம்

பூமிநாதசுவாமி மீது சூரியக்கதிர்கள் விழும் அதிசய நிகழ்வு; பக்தர்கள் தரிசனம்

திருச்சி: மண்ணச்சநல்லுார், பூமிநாதசுவாமி கோவிலில், பூமிநாதசுவாமி மீது சூரியக்கதிர்கள் விழும் அதிசய நிகழ்வை, பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் பூமிநாதசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் மூன்று நாட்கள் மட்டும் மூலவர் மீது, சூரியக்கதிர்கள் விழும் அதிசய நிகழ்வு நடைபெறும். திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனம், திருவானைக்காவல் பாப்பம்மாள் சத்திர கட்டளைக்கு உட்பட்ட பழமையான இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் பங்குனி, 9 மற்றும், 10, 11ம் தேதிகளில், மூலவர் மீது சூரியக்கதிர்கள் விழும்போது, சூரியபூஜை நடைபெறும். நேற்று காலை, சூரிய உதயத்தின் போது, பிரகாரத்தினுள் படிந்த ஒளிக்கதிர்கள், படிப்படியாக நகர்ந்து, மூலஸ்தானத்தில் உள்ள பூமிநாத சுவாமி மீது பட்டு பிரகாசித்தது. அதிசய சூரிய பூஜை நிகழ்வு நடைபெற்ற பின், சுவாமிக்கும், அம்பாளுக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. நேற்று நடைபெற்ற சூரிய பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று, பூமிநாத சுவாமி மற்றும் அறம்வளர்த்த நாயகி அம்பாளையும் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !